பல மாவட்டங்களில் காற்றின் தரம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு குறைந்துள்ளது.
குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீட்டின்படி, நுவரெலியா மாவட்டத்தைத் தவிர, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் காற்றின் தரம் பலவீனமானவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவில் உள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை மற்றும் அயல் நாடுகளில் இருந்து வீசும் தீங்கு விளைவிக்கும் தூசித் துகள்கள் அடங்கிய இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இதய நோய்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பொது வெளியில் முகக்கவசம் அணிவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காட்டுத் தீ, குப்பைகளை எரித்தல் மற்றும் போக்குவரத்து ஆகியவை காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு காரணம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇