மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிநடத்தலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட – வறுமைக்கோட்டிற்குட்பட்ட 17 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
லண்டனில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமான மானுடம் அமைப்பின் நிதி அனுசரணையில் மனிதநேய தகவல் குறிப்புகள் (மதகு) ஊடகத்தினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய இப்பொதிகள் 08-12-2024 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
மதகு நிறுவன திட்ட உத்தியோகத்தர் ருக்சிக்கா மயூரன் மற்றும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோர் இணைந்து பயனாளிகளிடம் கையளித்த இப் பொதிகள் பொலித்தீன் பாவனையைக் குறைக்கும் வகையில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய துணிப்பையில் .பொதியிடப்பட்டிருந்ததோடு, பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கான விழிப்புணர்வுச் செய்திகளும் அச்சிடப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
2 Responses
ஊடகம் எண்டால் இப்பிடி இருக்கணும். வாழ்த்துக்கள்.
உதவி தேவைப்பட்டால் எங்களையும் கூபிடங்க.