மதகு நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மழை மற்றும் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்து வீடு திரும்பிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மதகு நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.

பிரித்தானியாவைச் சேர்ந்த THE GATE INSTITUTE மற்றும் BRITISH TAMILS CRICKET LEAGUE ஆகியவற்றின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கில் சத்துருக்கொண்டான், இருதயபுரம் மேற்கு, பாலமீன்மடு, கோட்டமுனை, வீச்சுக்கல்முனை ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கான ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய உலர்உணவுப் பொதிகள் மதகு நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ருக்சிகா மயூரனின் தலைமையில் வழங்கப்பட்டன.

இவ் வேலைத் திட்டத்திற்கான கிராமம் மற்றும் பயனாளிகள் என்பன மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் பவனையைக் குறைத்து சூழல்நேயப் பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் இப்பொதிகள் பல்வேறு தேவைகளுக்குப் பாவிக்கக்கூடியதான துணிப்பையில் வழங்கப்பட்டதும், அதில் இது தொடர்பான விழிப்புணர்வுச் செய்தி அச்சிடப்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

இந்த மனிதாபிமானப் பணியில் நீங்களும் பங்களிப்பு செய்ய விரும்பினால் 076 55 88 55 4 எனும் இலக்கத்திற்கு அழையுங்கள்.

See insights

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects