வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான ஓர் மனிதாபிமானப் பணி மதகு ஊடகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மண்முனை வடக்கில் உள்ள நலன்புரி நிலையங்களுக்காக ஒரு தொகுதி பாய்கள் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சுதாகரனிடம் 27-11-2024 அன்று கையளிக்கப்பட்டன.
இவை உடனடியாக நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் தங்கி உள்ளவர்களுக்காக கிராம சேவைகள் உத்தியோகத்தர் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
நலன்புரி நிலையங்களிலிருந்து வீடு திரும்பிய பின்னர் மதகு ஊடகத்தினால் உலர் உணவுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மனிதாபிமானப் பணியில் இணைய ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பங்களிப்பை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கலாம்.
இதற்காக 076 55 88 55 4 எனும் இலக்கத்தினூடாக மதகு ஊடக திட்ட உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளலாம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
One Response
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்