மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மானுடம் UK நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மதகு நிறுவனத்தினால் கணனிகள், இணைய வசதி மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சி என்பன வழங்கப்பட்டதுடன் 02.04.2025 அன்று திட்ட நிறைவு நிகழ்வும் தகவல் தொழில்நுட்ப வகுப்பறைக்கான 35 கதிரைகள் வழங்கும் நிகழ்வும் வித்தியாலய அதிபர் சத்தியமாறன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் ஸ்ரீதரன் மதகு நிறுவன திட்ட உத்தியோகத்தர் ருக்சிக்கா மயூரன், மண்டூர் மகேந்திரனின் மகன் பிரியந்தன் மற்றும் பாடசாலை கல்வி அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மதகு நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமரர் சிதம்பரபிள்ளை மகேந்திரன் (மண்டூர் மகேந்திரன்) ஞாபகார்த்த பாடசாலை கல்வி அபிவிருத்தி என்னும் இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகள் பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பாடசாலைகளுக்கு பல்வேறு தேவைகள் காணப்படுவதாகவும் இந்த வேலைத்திட்டம் மூலமாக முக்கிய தேவையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக மதகு நிறுவனத்தை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.























இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…