2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.