மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விசேட விருதுகள் வழங்கும் நிகழ்வு.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு விசேட விருதுகள் வழங்கும் நிகழ்வு 30-12-2023 அன்று இடம்பெற்றது.

கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் ஆர். பாஸ்கரன் தலைமையிலும் கனவு மெய்ப்பட எனும் விசேட வேலைத்திட்டத்தின் இயக்குநரும், பாடசாலையின் பழைய மாணவருமான எந்திரி. யோகசுந்தரம் கோபிநாத்தின் ஒருங்கிணைப்பிலும் கனவு மெய்ப்பட வேலைத்திட்டத்தின் ஏற்பாட்டிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் எந்திரி. A. அற்புதராஜா மற்றும் டெலிகொம் நிறுவனத்தின் வடகிழக்கு மாகாணப் பொது முகாமையாளர் எந்திரி. மு. பத்மசுதன் ஆகியோரும், கௌரவ அதிதியாக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி K. பிரசாநந்தும், விசேட அதிதிகளாக சிரேஸ்ட பொறியியலாளர் R. மயூரபவன் மற்றும் BUDS நிறுவன தலைவர் L.R.டேவிட் ஆகியோரும் பாடசாலை முந்நாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையிலிருந்து 2023 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்ற 33 மாணவர்களுக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டதுடன் கனவு மெய்ப்பட வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்ட “கணிதவியலாளர் சங்கமம்” (MATHLETE SUMMIT) எனும் கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 33 மாணவர்களில் 19 பேர் கணிதத்துறையில் இருந்து தெரிவாகியமையும் அதில் ஆறு பேர் மெரிட் அடிப்படையில் சித்தியடைந்தமையும் கனவு மெய்ப்பட எனும் விசேட வேலைத்திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்விழா மேடையில் கணிதவியலாளர் சங்கமம் போட்டிகளின் இறுதிப் போட்டியும் இடம்பெற்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இலங்கையின் முதலாவது பாடசாலையும், 210 வருட வரலாற்றைக் கொண்டதுமான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இடம்பெறும் இவ் விசேட வேலைத்திட்டமானது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளிலிருந்தும் பல பொறியியலாளர்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு ஊடக அனுசரணை மதகு ஊடகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

3 Responses

  1. விருதுகள் பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects