மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்பக் கற்றலுக்கான உபகரணங்கள் மனிதநேயத் தகவல் குறிப்புகள் எனும் மதகு ஊடகத்தினால் 30-08-2024 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
மானுடம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ”அமரர் சிதம்பரப்பிள்ளை மகேந்திரன் (மண்டூர் மகேந்திரன்) ஞாபகார்த்த பாடசாலைக் கல்வி அபிவிருத்தித் திட்டம்” என்னும் செயற்றிட்டத்தினூடாக இவ் உபகரணங்கள் மதகு நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.
பாடசாலையின் பிரதி அதிபர் மணிவாசகன் தலைமையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர் சிதம்பரப்பிள்ளை மகேந்திரன் அவர்களின் துணைவியார் ராதா மகேந்திரன் மற்றும் மதகு நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ருக்சிகா மயூரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பாடசாலையின் தகவல் தொழில்நுட்பக் கற்றலுக்கான தேவையான மூன்று கணனிகள், ஸ்மார்ட் தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி என்பன கையளிக்கப்பட்டதுடன் கணனி வகுப்பறையும் விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மகேந்திரனின் துணைவியார் பாடசாலைச் சமுகத்தினரால் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் நிகழ்வின் ஏற்பாட்டாளர் மகேந்திரன் பிரியந்தன், பாடசாலைக் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர் ஐங்கரன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி ரா. ஶ்ரீகாந்த், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇