இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப் எண் +94716640560 அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 எனும் இலக்கத்தினூடாகவும் தொடர்புடைய தகவல்களைப் பெற முடியும்.
தற்போது சுமார் 8,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதுடன் அவர்களில் 90 வீதமானோர் தாதியர் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இலங்கையர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் ஏற்கனவே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇