அண்மையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
20 முதல் 30 ரூபா வரை குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் சில பகுதிகளில் முட்டையின் விலை கிட்டத்தட்ட 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇