மனிதாபிமானத் தகவல் சேவைகளை வழங்கி வரும் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனமான மதகு ஊடகத்தினால் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கர வண்டிகள் 03 – 05 – 2024 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
“நமது தேவை பூர்த்தியான பின்னர் நல்ல நிலையிலுள்ள பொருட்களை தேவையுடைய வேறொருவருக்குப் பகிரும்” எண்ணக்கருவிற்கமைய மதகு ஊடகத்தின் “Share to Care” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பெயர் குறிப்பிட விரும்பாத இரு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட இத் துவிச்சக்கர வண்டிகள் தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மனிதநேயத் தகவல் குறிப்புகள் எனும் மதகு நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திருமதி. ருக்சிகா மயூரனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனினால் இத்திட்டம் மாவட்ட செயலகத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாவித்த ஆனால் நல்ல நிலையிலுள்ள பல்வேறு பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் மதகு ஊடகத்தினுடாக வழங்க பலர் முன்வந்துள்ளதாகவும், “Share to Care” எனப்படும் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்டும் எனவும் ருக்சிகா தெரிவித்தார்.
மதகு ஊடகத்தின் இவ்வாறான மனிதநேய செயற்பாடுகளை அரசாங்க அதிபர் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇