மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுகள்.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கமும், சிறைச்சாலை நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு – 2025 எனும் நிகழ்வு 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை வளாகத்தினுள் நடைபெற்றது.

சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் வழிகாட்டலிலும், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத் தலைவர் சடாட்சரராஜாவின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க அங்கத்தவர்களும், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத் தலைவர் K. சுபாஷ்கரனும், ஆண்-பெண் கைதிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளான முட்டி உடைத்தல், யானைக்குக் கண் வைத்தல், தேங்காய் துருவுதல், கிடுகு பின்னுதல், ஊசியில் நூல் கோர்த்தல், மாவுக்குள் காசு எடுத்தல் போன்றவையும், சிறிது மாற்றம் செய்யப்பட்ட வகையில் தலையணைச் சமர், பணிஸ் உண்ணுதல், போத்தலில் நீர் நிறைத்தல் உட்பட பல்வேறு வினோத விளையாட்டுகள் நடாத்தப்பட்டு அவற்றிற்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் பாடல்களும் பாடப்பட்டன.

இந்நிகழ்விற்கான நிதி சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க அங்கத்தவர்களின் பங்களிப்பு, லயன்ஸ் கழகம் மற்றும் மதகு ஊடகத்தின் அனுசரணை என்பவற்றின் மூலம் பெறப்பட்டன எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects