மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்கு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மாணவ மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில் மலேசியாவைச் சேர்ந்த ஷான் மற்றும் ராஜநாயகி செல்வரத்தினம் ஆகியோரின் நிதி பங்களிப்பில் மானுடம் (UK) நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மதகு நிறுவனத்தினால் பாடசாலை வளாகத்தில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட எட்டு மலசலக்கூட தொகுதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாடசாலை சமூகத்தினரிடம் பயன்பாட்டிற்காக 09.06.2026 அன்று கையளிக்கப்பட்டது.
இச்செயற்றிட்டமானது பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் மலசலக்கூடங்கள் திருத்தப்பட்டன.
பாடசாலை அதிபர் சுந்தரலிங்கம் கிருஷாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதகு நிறுவன திட்ட உத்தியோகத்தர் ருக்சிக்கா மயூரனினால் குறித்த திட்டத்திற்கான பணி நிறைவு சான்றிதழ் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது தங்களது பாடசாலையில் மலசலக்கூட தொகுதிகளை புனரமைத்து தந்தமைக்காக மாணவர்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நிகழ்வின் மதகு நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மானுடம் UK நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி தொடர்பான பல செயற்பாடுகளை மதகு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










