கிழக்கு மாகாண சபைக்கூடாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக ஹுதா பள்ளி குறுக்கு வீதிக்கான கொங்றீட்டுடனான வடிகான் அமைக்கும் ஆரம்ப நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் தாஹிர் தலைமையில் 31.07.2025 அன்று இடம் பெற்றது.
1.5 மில்லியன் ரூபாய்கள் செலவில் 60 மீற்றர்கள் நீளமுள்ள வீதிக்கான குறித்த ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு குழு தவிசாளருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும் குறித்த நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் பைறூஸ், கோறளைப்பற்று மேற்கு திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










