சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து பதிலீட்டு உணவுகளை நாடியமையால் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாவாக காணப்பட்ட கரட் ஒரு கிலோகிராமின் விலை தற்போது 800 ரூபா வரை குறைந்துள்ளது.
அத்துடன் கோவா, வெண்டைக்காய், பீட்ரூட், போஞ்சி என்பவற்றின் விலையும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇