ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத வழிகள்….
- வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை உணவுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.
- ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் பழங்கள் அல்லது காய்கறிச்சாறு அருந்தலாம்.
- காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.
- சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.
- உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.
- எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.
- தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
- மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.
- ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.
- காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.
- புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.
- உங்கள் ஆழ்மன ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல் நிலையை மனதால் உணருங்கள்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…