மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவானது ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை மற்றும் கண்காட்சி 27.11.2023 அன்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், கணக்காளர் விக்னராஜா, நிருவாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வின் போது பிரதேச செயலக பிரிவின் உள்ளூர் உற்பத்தியாளர்களால் செய்யப்பட்ட பொருட்கள் (தைத்த ஆடைகள், உள்ளூர் மரக்கறிகள், உணவு வகைகள், மரக்கன்றுகள், பாதணிகள், கைப்பணிப்பொருட்கள், மரத்தினாலான கைவினை பொருட்கள், பனையோலை பொருட்கள், கைத்தறி) காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதோடு இக் கண்காட்சியில் கலந்துகொண்டவர்களினால் பொருட்களும் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇