கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17.03.2025) ஆரம்பமாகியுள்ளது . 

நாடளாவிய ரீதியாக இம்முறை 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சைக்கு 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இப் பரீட்சைக்கு 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார். 

“உங்கள் அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டையை இப்போதே தயார் செய்து பரீட்சைக்கு எடுத்துச் செல்லுங்கள்.” 

பரீட்சை எழுதும் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் அடையாள அட்டையை எழுதப்பட வேண்டும். முதல் நாளில் மண்டபத்தில் அனுமதி சீட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 

அது உங்களிடம் திருப்பித் தரப்படமாட்டாது. அத்துடன் பரீட்சை எழுத பேனாக்கள் மற்றும் பென்சில்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவரலாம். 

வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது. தேவைப்பட்டால், ஒருவருக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக இதை நினைவில் கொள்ளுங்கள் ” என்றார்.

பரீட்சை எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை , தற்போது சீரற்ற காலநிலையினால் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.

அதன் பிரகாரம் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117க்கு அல்லது 0113 668 020 அல்லது 0113 668 100 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு , பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் பரீட்சார்த்திகள் அது குறித்து 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects