மாதவிடாய் மூலம் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய புதிய முறை – ஆராய்ச்சியாளர்கள்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும் துல்லியமான மற்றும் எளிதான வழியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சவால் என்ன?

தற்போது நடைமுறையில் உள்ள ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) அல்லது என்.எச்.எஸ் (NHS) சோதனையில், மருத்துவர் அல்லது தாதியர் மூலம் கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஆனால், வலி, கூச்சம் மற்றும் அசௌகரியம் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தப் பரிசோதனைக்குச் செல்வதில்லை.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இச்சோதனையைத் தவிர்க்கின்றனர்.

புதிய பரிசோதனை முறை:

சீன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், பெண்கள் வீட்டில் இருந்தபடியே பரிசோதனை செய்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண மாதவிடாய் கால சுகாதர துவாயில் (Sanitary pad) பொருத்தப்பட்ட ஒரு மெல்லிய பருத்திப் பட்டையின் (Cotton strip) மூலம் சேகரிக்கப்படும் இரத்தத்தைக் கொண்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் முக்கிய அம்சங்கள்:

20 முதல் 54 வயதுடைய 3,000 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வக முடிவுகளின்படி, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு இணையாக இந்த இரத்தப் பரிசோதனை முறையும் துல்லியமான முடிவுகளை வழங்கியுள்ளது.

புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (HPV) இருப்பதை இது துல்லியமாகக் கண்டறிகிறது.

நிபுணர்களின் கருத்து:

“புற்றுநோய் பரிசோதனையை மிகவும் எளிமையாக்குவதும், பெண்களுக்கு வசதியான சூழலை உருவாக்குவதும் வரவேற்கத்தக்கது.

இது அதிகப்படியான பெண்கள் பரிசோதனையில் ஈடுபட ஊக்குவிக்கும்” என புற்றுநோய் தொடர்பான தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இது இன்னும் ஆரம்பகட்ட ஆய்விலேயே உள்ளது.

மேலும், மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களால் இம்முறையைப் பயன்படுத்த முடியாது என்பதால், இது தற்போதைய முறைகளுக்கு முழுமையான மாற்றாக அமையாது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects