அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆசிய சமூக சேவைத் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.

2022 ஆம் ஆண்டளவில் அடைந்திருந்த கரும்புள்ளியை அகற்றி 2024 ஆம் ஆண்டில் இந்த முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளது.

2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயல் திறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல் சுட்டிக்கு அமைய இலங்கை 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதற்கமைய கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் DOING OKEY குழுவில் இலங்கை இணைந்துள்ளது.

2022 சுட்டெண் படி, இலங்கை பங்களாதேசுடன் தரவரிசையில் NOT DOING ENOUGH பிரிவில் இருந்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்துள்ளது என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவிடப்படும் இக் குறியீட்டில், சிங்கப்பூர், சீனா, தைபே ஆகிய நாடுகளின் வகுதியான DOING WELL குழுவில் 2026 ஆண்டில் இணைவதற்கான மறுசீரமைப்புகள் இடம்பெறுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects