நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலயத்திற்கு கத்தாவடி உறவுகள் எனும் தன்னார்வ அமைப்பினால் கிணற்று நீர் இணைப்பு வழங்கப்பட்டது.
பாடசாலையின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட இவ் வேலைத்திட்டம் கடந்த 01.10. 2023 அன்று நிறைவேற்றப்பட்டது.
இப்பாடசாலையில் கல்வி கற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட கத்தாவடி உறவுகள் எனும் அமைப்பினர் பாடசாலை தேவைகளை உணர்ந்து தாமாகவே முன்வந்து அதனை நிறைவேற்றித் தந்ததாகவும், இதன் மூலம் பாடசாலையின் மாதாந்த நீர்க்கட்டண செலவு வெகுவாகக் குறைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி. பிரபாஹரி இராஜகோபாலசிங்கம் தெரிவித்தார்.
3 Responses
சிறந்த முன்னுதாரணமான செயல். பாராட்டுக்கள்.
சிறந்த செயல்
வாழ்த்துகள் .
Super!