ஐக்கிய இராய்ச்சியத்தைச் சேர்ந்த மியோட் எனப்படும் தமிழர்களின் மருத்துவ நிறுவனத்தின் நிதி அனுசரணையில், lift தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் உலர்உணவுப் பொதிகள் 13-12-2024 அன்று காரைதீவில் வழங்கப்பட்டன.
இவ் உலர் உணவுப் பொதிகள் Lift நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரனினால் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் S. பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு பின்னர் lift நிறுவன உத்தியோகத்தர்களினால் நேரடியாகப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
காரைதீவு வெள்ள நிவாரண உலர் உணவு விநியோகத்தின் விசேட இணைப்பாளராக செயற்படும் கிராம உத்தியோகத்தர் S. கஜேந்திரனின் ஒருங்கிணைப்பில் இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருந்ததுடன், lift நிறுவனத்தினால் காரைதீவில் கடந்த வாரமும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருந்தமையும், அதே போல மியோட் நிறுவனத்தினால் மட்டக்களப்பிலும் lift. நிறுவனம் ஊடாக கடந்த வாரம் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்ட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇