கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக வொல்பெகியா என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவனொளிபாதமலைக்கான பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லத்தண்ணி நகரில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவினர் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன், டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து வர்த்தகர்களுக்கு இதன்போது விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇