இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 6.58% அதிகரிப்பாகும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇