மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமையவுள்ளது.
150 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இக்கற்கை நெறியை அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவ் கற்கை நெறிக்கான வளவாளராக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளர் பி.ராஜேஸ் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்விற்கு அரச கரும மொழிகள் திணைக்கள இரண்டாம்மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார், ஆர்.சுபாசினி, மு.ஷாருகாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










