74வது ஆண்டு சப்போரோ பனி சிற்ப திருவிழா கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள சப்போரோ நகரில் உள்ள – Ōdōri Park, Susukino மற்றும் Tsudome ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இடம்பெறும் குறித்த இலவச பனி சிற்ப திருவிழா கண்காட்சி மிகவும் பிரபலமான குளிர்கால நிகழ்வாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் 20 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள்.
இவ்வருடம் விசித்திரக் கதைகள் முதல் பாய்ந்து செல்லும் குதிரைகள் வரை 196 பிரமிக்க வைக்கும் பனி மற்றும் பனி சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇