கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

(Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp (வாட்ஸாப்) குழுவானது, கல்வி வலயங்கள் முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதாகக் கூறிக்கொள்வதாகவும், ஆனால் இது கல்வி அமைச்சுடன் தொடர்புடையதல்ல எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் இக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தகவல் தொடர்புகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்காது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், அரசின் புதிய கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளைத் திசைதிருப்ப முயற்சிக்கும் இத்தகைய குழுக்களால் ஏமாறாமல் ஆசிரியர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects