தொழில் வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் புகைப்படம் மற்றும் கமரா பழுது பார்த்தல் பயிற்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தொழில் திறன் உள்ள இளைஞர்களை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் தேவையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 20 இளைஞர்களுக்கான புகைப்படக்கலை மற்றும் புகைப்படக்கருவி திருத்தம் தொடர்பான தொழில்திறன் விருத்திப் பயிற்சியானது மட்டக்களப்பில் 22.04.2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

10 நாட்கள் கொண்ட இப்பயிற்சி நெறியானது Nikon School, House of Camera மற்றும் Optik House ஆகிய நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் வளவாளர்களினால் நடத்தப்படுதுடன் அம்கோர் நிறுவன நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பில் இயங்கும் voice of media ஊடக கற்கைகள் நிறுவனமானது இப்பயிற்சி நெறியினை ஒருங்கிணைப்பு செய்கின்றது.

பயிற்சி பெறும் இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த தொழில்திறனையும் அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ளுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைப்படக்கருவி பராமரிப்பாளர் மற்றும் திருத்துனருக்கான பயற்சி இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects