நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களையும் பதிவு செய்வதற்காகத் தரவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயலி ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 27ஆவது பிரிவுக்கமைய அனைத்து வர்த்தகர்களும் பதிவு செய்திருக்க வேண்டும்.
எனினும் கடந்த இரண்டு தசாப்தங்களாக இது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇