பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ரயில் தடம்புரள்வு இன்று (24.09.2024) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியிலேயே மேற்படி ரயில் தடம் புரண்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் தண்டவாளம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், தற்போது சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇