விளையாட்டு வீரர்களுக்கான நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்தை கண்காணிக்கும் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியான “Sip to Fit”, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் (Duncan White) மண்டபத்தில் வைத்து 28.01.2026 அன்று வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இந்தச் செயலி பயிற்சிகளின் போது வியர்வை மூலம் வெளியேறும் நீர் மற்றும் சோடியத்தின் அளவைக் கணக்கிட உதவுகிறது.
இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் தமது உடலின் நீர்ச்சத்தைப் பேணவும், பயிற்சிகளுக்குப் பின்னரான உடல் தேற்றத்தை (Recovery) மேம்படுத்தவும் முடியும். மேலும், விளையாட்டுத் திறனை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துத் திட்டமிடலுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) பதில் ஆலோசகர் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஹஷான் அமரதுங்கவினால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், பளுதூக்கல் வீரர் ஹர்ஷன குணதிலக மற்றும் விளையாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சர்வதேச மட்டத்திலான நவீன விளையாட்டு வீரர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கப்படுவதாகவும், இலங்கை வீரர்களும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.






![]()










