இலங்கையின் தேசிய மின்வலையமைப்புடன் இணையும் Battery Energy Storage Systems (BESS) தொகுதி!

இலங்கையின் தேசிய மின்வலையமைப்புடன் பாரிய அளவிலான Battery Energy Storage Systems (BESS) தொகுதிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத ஆரம்பம் முதல் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய மின்சாரத்தை இந்த மின்கல தொகுதிகளில் சேமித்து வைத்து, இரவு நேரங்களில் தேசிய மின்வலையமைப்புக்கு மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய மின்வலையமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதுடன், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக டீசல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பதையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக நாட்டின் 16 மின்சார பரிமாற்ற உப மின் நிலையங்களில் இந்த மின்கல சேமிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மின்கல திட்டத்திற்கும் தேசிய மின்வலையமைப்புக்கு 10 மெகாவாட் (MW) மின்சாரத்தை வழங்கும் திறன் காணப்படும்.

மேலும், நாட்டின் மேலும் 23 உப மின் நிலையங்களில் மின்கல மின்சக்தி சேமிப்பு தொகுதிகளை நிறுவுவதற்கான கொள்வனவு நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத் திட்டம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கும், சூரிய மின்சாரத்தை திறம்பட சேமித்து தேவையான நேரத்தில் பயன்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects