நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஏற்பட்ட பயிர்ச் சேதம் காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு எதிர்வரும் நத்தார் பண்டிகை காலம் வரை தொடரும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய தரவுகளுக்கு அமைய, 30.11.2023 அன்றைய தினம் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 750 ரூபா முதல் 800 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், ஒரு கிலோகிராம் போஞ்சி 350 ரூபாவுக்கும், பாகற்காய் ஒரு கிலோகிராம் 500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇