இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் வெற்றி உரையின் போது அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோடிட்டுக்காட்டியுள்ள போதிலும் எப்போது தேர்தல் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனுரகுமாரதிசநாயக்க தனது முன்னைய அறிவிப்புகளிற்கு ஏற்ப நாடாளுமன்றத்தை இந்த வாரம் கலைத்தால் நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் கலைப்பு,தேர்தல் குறித்த அறிவிப்பு 25ம் திகதி வெளியாகலாம் என தேர்தல் கண்காணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுகாலம் , ஒக்டோபர் 4ம் திகதிக்குள் – அறிவிப்பு வெளியாகி பத்து நாட்களிற்குள்- வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏழு நாட்கள்
தேர்தல் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பு – ஒக்டோபர் ஏழாம் திகதிக்குள் வெளியாகலாம்.
தேர்தல் வாக்களிப்பு திகதி -நவம்பர் 22 லிருந்து 30ற்க்குள் – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 66 நாட்களிற்குள் தேர்தலை நடத்தவேண்டும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇