அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலோன் மஸ்க் நிறுவிய நியூராலிங்க் (Neuralink) நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியை செய்ய தொடங்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தின் முதல் முயற்சியான மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மிக துல்லியமான முறையில் நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையின் மூலம் இந்த சிப் பொருத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இதன் முதற்கட்ட பரிசோதனைகளின் படி குறித்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க ஆரம்பித்தமைக்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மின்னணு சிப்பை பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயற்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇