இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை குறைக்கும் பொறிமுறை தொடர்பில் ஆராய்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எரிபொருள் விலையை மேலும் குறைக்கும் திறன் கொண்ட புதிய முறையொன்றின் மீது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இது எரிபொருள் விநியோகத்தர்களுக்கான பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும், எரிபொருள் பாரவூர்தியின் உதிரி பாகங்களின் விலை மற்றும் ஏனைய பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம், இந்த செலவு முகாமைத்துவத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார். 

இது தொடர்பாக விநியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், அவர்கள் செலவு முகாமைத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இது எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects