இந்தியாவின் ஹரியானாவில் நடைபெற்ற 39 வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைக் கண்காட்சியில் (சூரஜ்குண்ட் மேளா) பங்கேற்கும் 53 நாடுகளில் இலங்கை “சிறந்த வெளிநாட்டு விருதை” வென்றுள்ளது.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைபெற்ற இக் கண்காட்சியில் இலங்கையின் பட்டிக் கலைஞர் இரேஷா சிந்தனி டி சில்வா இந்த விருதைப் பெற்றார்.
உலகம் முழுவதிலுமிருந்து திறமையான கைவினைஞர்களை ஒன்றிணைக்கும் ஓர் வருடாந்த நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
இலங்கையின் பட்டிக் கைவினைத்திறனின் சிறப்பை வெளிப்படுத்திய டி சில்வாவின் படைப்புகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றன, இது விருதுக்கு வழிவகுத்தது.
இந் நிலையில் இந்த விருதை வென்ற இரேஷா சிந்தனி டி சில்வா 15.02.2026 அன்று நாடு திரும்பினர்.
தேசிய கைவினை மன்றம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் வருகையை வரவேற்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










