அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் 01.01.2024 அன்றில் இருந்து பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வற் வரியின் ஊடாக வெதுப்பக தொழிற்துறை பாதிப்படைந்த நிலைமையில் உள்ளது. இந்தநிலையில் அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அத்துடன் வெதுப்பக உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects