2019.04.21 அன்று உயிர் நீத்த உறவுகளின் ஆறாம் ஆண்டு நினைவாக எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்தும் இரத்த தான முகாம் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (21.04.2025) இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் சுகேந்திரன் சுஜீவா தலைமையிலும் இளைஞர் சேவை அதிகாரியும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தருமாகிய A.தயாசீலனின் வழிகாட்டலின் கீழ் இந்த இரத்த தான முகாமானது தாண்டவன்வெளி பேடினன்ஸ் மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது.
காத்தன்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிஷாந்தி அருள்மொழி, கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோத்தர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் M.ரம்ஷி, இளைஞர் யுவதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது இரத்ததானம் செய்த 75 ற்கும் மேற்பட்ட கொடையாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ்களை ஏற்பாடு செய்த AIM FOR DREAM அமைப்பின் ஸ்தாபகர் I.செந்தூரன், இணை பங்களிப்பு வழங்கிய முன்னாள் பிரதேச சம்மேளன தலைவர் S.லவண்ராஜ் மற்றும் 2019 ஆம் ஆண்டு இவ்வாறான நினைவேந்தல் இரத்ததான நிகழ்வை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவரும் இன்றைய தினம் சிற்றுண்டிகளை வழங்கிய முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் ஜெயராசா பயஸ்ராஜ், மரக்கன்றுகளை வழங்கிய studio jk உரிமையாளர், மெழுகுவர்த்திகளை வழங்கிய செல்வி கௌசல்யா ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










