பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று முதல் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28.04.2026) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். 

கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில், இம்முறை பரீட்சைக்கு 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 

இதற்கிடையில், 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 30,000க்கும் மேற்பட்டோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இம்முறை உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்ற பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 7,477 ஆகும், இது 3.38 சதவீதமாகும். 

மேலும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects