எரிபொருள் விலைகளில் திருத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

31.03.2025 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பிரகாரம், 309 ரூபாவாக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 361 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி தொடரும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் லங்கா வெள்ளை டீசலின் விலை ரூ. 286 ஆகவும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 331 ரூபாவாகும்.

மேலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 183 ரூபாய் ஆகவும் மாற்றமின்றி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ.ஓ.சி, சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்துக்கமைய நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects