காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அகில இலங்கை ஜமியத்துல் உலாமா சபை காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் 28.04.2024 அன்று நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை தலைவர் மெளலவி ஹாரூன் ரசாதி தலைமையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியாச்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
காத்தான்குடி தளவைத்தியசாலை குருதிக் கொடையாளர்கள் சம்மேளனம் (BDF) மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவின் செயலாளர் மௌலவி அனீஸ் பலாஹி ஆகியோரின் ஒருங்கமைப்புடன் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் சுமார் 97 பைன்ட் உதிரம் சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தானகுடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி டாக்டர் அலிமா அப்துர் ரஹ்மான் உட்பட வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள், உலமாக்கள், குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், வைத்தியசாலையின் தாதியர்கள், ஊழியர்கள், குருதிக் கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇