“உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் நகர மண்டபத்தில் 20.02.2024 அன்று இடம்பெற்றது
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார் .
மேலும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் முதலமைச்சின் செயலாளருமான என்.மதி வண்ணன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் உள்ளிட்ட மாநகர சபையின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகங்களின் நூலகர்கள் உள்ளிட்ட நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .
நிகழ்வில் நடன கலைஞர்களின் அழகிய கண்கவர் நடனங்கள், மாணவர்களின் பேச்சுக்கள், பொது நூலகங்களினால் வெளியிடப்பட்ட எட்டு சஞ்சிகைகளின் வெளியீடு, தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட வாசகர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇