இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 11 இலட்சத்து 46 ஆயிரத்து 272 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 237,037 ஆகும்.

மேலும், ரஷ்யாவிலிந்து 112,118 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 105,703 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 73,727 சுற்றுலாப் பயணிகளும் , சீனாவிலிருந்து 64,309 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 60,634 சுற்றுலாப் பயணிகளும் , அவுஸ்திரேலியாவிலிருந்து 49,762 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் , இவ்வாண்டின் ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில் 116,469 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects