மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் 1ஆம் திகதி ஆணைக்குழுவிடம் வழங்கப்படவிருந்தன.
எவ்வாறாயினும் மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய நாளை (10) வரை குறித்த காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி நாளைய தினம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇