NAITA நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற திறன் விருத்தி பயிற்சிகள் தொடர்பான விளக்கவுரை மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு 01.04.2024 அன்று கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிகள உத்தியோகத்தர்களுக்காக இவ்விளக்க உரை மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கிண்ணியா நகர சபைக்குட்பட்ட NAITA நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் எம்.என்.பாத்திமா நஸ்மிராவினால் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் தலைமை முகாமையாளர் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇