ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் 18.06.2024 அன்று ஆரம்பமாகியது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பாலஸ்தீன போர், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
இம் மாநாடு 18.06.2024 அன்று தொடக்கம் எதிர் வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
எனினும், இலங்கை தொடர்பான விவகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇