செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த
மாற்றமும் இருக்காது என அதன் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ்
தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










