சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அதன் பிரகாரம் கரட், போஞ்சி, கோவா, வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கரட் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் கோவா 220 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணிக்காய் 60 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇