2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் (2024) புத்தாண்டுக்கான இனிப்புப் பண்டங்களை தயாரிப்பதற்கு 02 மடங்கு செலவு ஏற்படும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டை விட, புத்தாண்டுக்கான இனிப்புக்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை 02 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாற்சோறு, பலகாரங்கள், கேக் மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇